அலுவலக தொலைபேசி எண்களில் மாற்றம் போக்குவரத்து மாகாண ஆணையாளர் அறிவிப்பு!

3 2
3 2

இலங்கையின் மோட்டார் போக்குவரத்து மாகாண ஆணையாளர் அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்கூட்டிய அனுமதிக்கு மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண் மாற்றப்படுவதாக மோட்டார் போக்குவரத்து மாகாண ஆணையாளர் சுமித் சீ.கே.அலஹகோன் கூறியுள்ளார்.

அதேபோல ஆடம்பர வரி தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து மாகாண ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மோட்டார் போக்குவரத்துக்காக நாராஹென்பிட்டி பிரதான காரியாலயம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய 0706354113 என்ற தொலைபேசி எண் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 0706354108 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து முன்கூட்டிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இலக்கங்களின் ஊடாக உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

மேலதிகமாக ஆடம்பர வரி செலுத்துவதற்காகவும் நேரங்களை ஒதுக்கிக்கொள்வதற்காகவும் 0706354197 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.