இராணுவத்தால் வழங்கப்பட்டது வீடு!

FormatFactory01
FormatFactory01

யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூர்ய சிரேஷ்ட
அதிகாரி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும் திருமதி
மோகன் உத்திராஜினி என்பவரின் வாழ்கை தரத்தினை உயர்தும் நோக்குடன் யாழ்ப்பாண
பாதுகாப்பு படை கட்டளை தளபதி அவர்கள் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட இல்லம்
வழங்கும் நிகழ்வானது இன்று நடைபெற்றது.

நீர்வசதியினை பெற்றுக் கொடுப்பதற்காக திரு வீ.தபோதரன் அவர்களின் நிதி உதவியுடன் குழாய்க்
கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்த இல்லமானது யாழ்ப்பாண பாதுகாப்புப் படையின் நலன்புரி தொகையின் மூலாதார
நன்கொடையினால் இலங்கை இராணுவத்தின் 11வது காலாட் படையணி மற்றும் 5வது
பொறியியலாளர் சேவை படைபிரிவில் சேவையாற்றும் இராணுவ வீரர்களின் சரீர ஒத்துளைப்புடன்
நிர்மாணிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 51வது படைத்தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள், வலிகாமம் மேற்கு பிரதேச
செயலாளர்,இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், திரு வீ.தபோதரன், இராணுவ வீரர்கள் மற்றும் பலர்
கலந்து கொண்டனர் .