சஜித் வென்றால் நாட்டுக்குப் பின்னடைவு என்கிறார் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க!

sb 1
sb 1

சஜித் பிரேமதாச எதிர்பாராத விதமாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேற்றி பெற்றால் மைத்திரி – ரணில் முரண்பாட்டை விடவும் சஜித் – ரணில் முரண்பாடு பூதாகரமான இருக்கும். இதனால் நாடு மேலும் பின்னடைவையே சந்திக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும்இ மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் அது இந்நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெற்ற வரமாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரை வேட்பாளராக நியமிக்கவில்லை. எனினும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது மாத்திரமின்றி 30 வருட கால உள்நாட்டு யுத்தத்தையும் நிறைவுக்கு கொண்டுவந்தார்.

எனினும் 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் எழ முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே அந்த நிலைமையை மாற்றியமைக்க மீண்டும் மஹிந்த ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.