வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்

3 rop
3 rop

இறுதி ஆண்டு வைத்திய பீட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பல்கலைக்கழக வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பல்கலைக்கழகங்கள் திடீரென மூடப்பட்டதன் காரணமாக இறுதி ஆண்டு வைத்திய பீட மாணவர்கள் 600 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பரீட்சையை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சதம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும்,மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், விடுதிகளில் தங்கியிருக்கும் போது, சமூக இடைவெளியைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்தும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.