ஆறுமுகம் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்!

7 bh
7 bh

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து, இ.தொ.கா. பிரதிநிதிகள் இன்று மாலை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரால், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.