நீராவியடி விவகாரத்துக்கு பதில் சொல்லிவிட்டு வாக்கு கேட்டுவாருங்கள் – சாள்ஸ் எம்பி!

charlas
charlas

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றக் கட்டளையை மீறி நடைபெற்ற அடாவடிகள் தொடர்பாக, வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவித்துவிட்டு வாக்குக் கேட்க வாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் செம்மலை விவகாரத்தில் ஒருசில பெளத்த குருமார்களோ அல்லது பெளத்த இளைஞர்களோ ஈடுபட்டனர் என் பதை ஏற்க முடியாது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

அத்துடன் இந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த நாடு சிங்கள, பெளத்த நாடு. இங்கு தேரர்களின் தலைமை களுக்கு இடமளிக்கவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் இன்று பிரச்சினைகள் இல்லை. இந்த நிலப்பிரச்சினையை தேரர்களிடம் விட்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது.

இந்த பிரச்சினை வளரத் தமிழ்த் தரப்பே காரணம். நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் ஒரு பிரச்சினை வந்திருக்காது. நீங்கள் செய்த செயலால் தெற்கில் மக்கள் மத்தியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அந்த தேரர் இறந்தால் அங்கு இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளது.

இங்கு கொழும்பில் சிங்கள மக்களுடன் வாழ்ந்து கொண்டு இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவது தவறானது – என்றார்.