ஆனைவிழுந்தான் வயல்க்காணி தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம்

1 aa scaled
1 aa scaled

ஆனை விழுந்தான் வயல்க்காணி தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் முக்கிய தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் 28 ஆவது அமர்வு இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

அமர்வு ஆரம்பமான போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலியும் இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.

அதன் பின்னர் கிளிநொச்சியில் தற்போது பாரிய பிரச்சினையாக இருக்கும் ஆனைவிழுந்தான் வயல்க்காணி தொடர்பில் பிரதேச சபையின் உறுப்பினர் செல்வநாயகம் அவர்களால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

குறித்த வயல் காணிகளை மக்களுக்கே வழங்கி மக்களினதும் மாவட்டத்தினதும் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் நெல் விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் போது வனவளத்திணைக்களம் அதற்கு தடையாக இருக்கிறார்கள் என்றும் அந்த பிரதேசத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்பு உள்ளது எனவும் உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த பிரேரணையினை சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.