மட்டக்களப்பில் வடிகான்களை சுத்திகரிப்புச் செய்யும் விசேட செயல்திட்டம் ஆரம்பம்!

3 2
3 2

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வடிகான்கள் மழை நீர் வடிந் தோடக்கூடியவாறு சுத்திகரிப்புச் செய்யும் விசேட வேலைத்திட்டம்  இன்று மட்டக்களப்பு புகையிரத நிலையம் முன்பாக சம்பிரதாயபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய பிரதான வடிகாண்கள் குப்பைகள் நிறைந்து அசுத்தமடைந்து காணப்படுகின்றன. இவ்வடிகாண்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக குப்பைகளை கொடுவதனாலும் அதனை முறையாக பராமரிக்காத காரணங்களினாலும் மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன், பொதுமக்கள் வெள்ள நீரால் பெரும் அசௌகரியங்களை  எதிர்நோக்கிவருவதுடன் நுளம்புகள் பரவி டெங்குபொன்ற நோய்கள் ஏற்படுகின்றது.

 
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வையேற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவானின் வேண்டுகோளில் இச்செயற்றிட்டம் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர்களின் பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொரமுனை மாவட்ட இளைஞர் அணித்தலைவர் ஹரிபிதாப்  அரச திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர் என பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியை ஆரம்பித்துவைத்தனர்.