கொரோனா தொற்றில் இருந்து 1122 பேர் குணமாகினர் !

5 corona virus 1
5 corona virus 1

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் 65 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 1122 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு கிழக்கு, இரணவில,வெலிசறை, ஹோமாகம மற்றும் மினுவாங்கொட வைத்தியசாலைகளில் இருந்து இவர்கள் குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை 1859ஆக இருந்தது.

726பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.