விசாரணைக்கு தடை ஏற்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

 பாதுகாப்பு அதிகார சபை
பாதுகாப்பு அதிகார சபை

நாட்டில் விசாரணைக்கு தடை ஏற்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் மற்றுமொரு அதிகாரிக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியமை உட்பட அண்மைக் காலமாக அறிக்கையிடப்பட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண இதனை தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் உடல், உள பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல் மற்றும் கவனத்தில் கொள்ளப்பட்டாமை குறித்து அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரங்களை பயன்படுத்தும்போது, அதற்கு தடையை ஏற்படுத்தல் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒவ்வொருவரும் குற்றமிழைப்பதாக அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் அபாரதமோ,அல்லது (6) மாதங்கள் சிறைத் தண்டணையோ விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.