அம்பாறை மாவட்டத்தில் செயற்கை உடல் உறுப்புக்கள் இலவசமாக வழங்கி வைப்பு!

main qimg a297b5f499ee42f4346f1aa1974038e8
main qimg a297b5f499ee42f4346f1aa1974038e8

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வலுவழப்புடன் கூடிய நபர்களுக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான செயற்கை உடல் உறுப்புக்களை இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (10) கல்முனை எஸ்.எல்.ஆர். வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை நவஜீவன நிறுவனத்தின் ‘கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகளின் சமூக சேவைகளை அணுகுதல் மற்றும் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடைதல்’ எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக சி.பி.எம் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த செயற்கை உடல் உறுப்புக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட செயற்திட்ட இணைப்பாளர் ரி.டி.பத்மகைலநாதன், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக சேவை அதிகாரி எம்.ஜீவராஜ், சமூக சேவைகள் உத்தியோகத்தர்களான கே.சிவகுமார், எம்.ஐ.எம்.முர்சித், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எல்.சபாஸ்கரன் உட்பட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ் ,முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் வலுவிழந்த சிறுவர்கள் எனப் பலர் இந்த செயற்கை உடல் உறுப்புக்களை பெற்றுக்கொண்டனர்.