கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளின் பெயரால் அபகரிப்பு: மங்கள சமரவீர

mangala gota
mangala gota

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளின் பெயரால் அபகரிப்பு முன்னெடுக்கப்படுவதற்காக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். 

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்திச் செல்லுவதாக கூறியுள்ள அவர், நாட்டின் நல்லொழுக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இராணுவத்தை முன்னிலைப்படுத்தி செயலணியை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, சிறுகுழந்தை உள்ளிட்ட அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த சுனில் ரத்னாயக்கவுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ள நிலையில் அவருக்கு பொது மன்னிப்பை  ஜனாதிபதி கோத்தபாய வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். 

அத்துடன் நாட்டில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தோன்றியுள்ளதாகவும் முச்சக்கரண்டிகள் சங்கத் தலைவர் கொல்லப்பட்ட செயலின் மூலம் இதையே உணர்வதாகவும் கூறிய அவர், நல்லாட்சியில் காணப்பட்ட நிலமை, தற்போது நேரெதிராக மாறியுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.