உணவுகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சி

8 hh
8 hh

நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியின் காரணமாக தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட சமையல்காரர்களுக்கு தங்களது தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் உணவுகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கும்புறுமூலையிலுள்ள கிழக்கு மாகாணத்திற்கான நிலையான அபிவிருத்தி மற்றும் கண்ணியமான அதிகாரமளிப்பதற்கான எம்.ஜே.எஃப் மையத்தில் செஃப் கில்ட் லங்காவுடன் (Chef’s Guild Lanka) எஸ் 4 ஐ ஜி (S 4 I G) ஒன்றிணைந்து ஐந்து நாள் கொண்ட பயிற்சி நெறியின் இறுதி நாள் சான்றிதழ் மற்றும் சின்னம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இலங்கை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திறன்கள் (Sri Lanka Skills for Inclusive Growth) குழுத் தலைவர் டேவிட் ஆப்லெட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், செஃப் கில்ட் லங்கா தலைவர் ஜெரட் மெண்டிஸ், பாசிக்குடா உல்லாச விடுதிகள் சங்க பிரதிநிதிகள், சுற்றுலா சங்க அமைப்புகள், செஃப் கில்ட் லங்கா பிரதிநிதிகள், பயிற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பயிற்சி நெறியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தலா இருபது சமையல்காரர் வீதம் இப்பயிற்சியில் இணைந்து கொண்டு தங்களின் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் உணவகளை தயாரிப்பதில் இவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் மறு வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தல், பொதுவாக தொழில்துறையில் இருக்கும் இவர்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கில் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட்-19 காரணமாக நீண்ட காலமாக தொழில் இழந்த சமையல்காரர்கள் தொழில் செய்த பகுதிகளில் மீண்டும் தொழிலை ஆரம்பிக்கவும், பழைய தொழிலாளர்கள் உல்லாச துறையை கவரும் வகையில் தங்களை தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்காகவும் கொண்டு குறித்த பயிற்சிகள் செஃப் கில்ட் லங்காவுடன் கூட்டு சேர்ந்து எஸ்4ஐஜி மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திறன்கள் (Sri Lanka Skills for Inclusive Growth) சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு மேலாளர் ஜீடி தீபன் தெரிவித்தார்.