இரு கார்கள் விபத்து – பெண் உயிரிழப்பு

01 6
01 6

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை வெள்ளவத்தை பழைய ஹவலோக் வீதியில் இவ்விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வெள்ளவத்தை பாமன்கடையில் இருந்து மாயாசுற்றுவட்டம் நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் களுபோவில வைத்தியசாலையிலும், நாரஹேன்பிடிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சிங்கள திரைப்பட இயக்குனர் சந்திர ரட்ணவ மப்பிடிகமவின் மகள் வினாவி (41) களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்ட பின்னர் உயிரிழந்தள்ளதுடன் ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர்.

விபத்தில் உயிரிழந்த வினாவி என்பவர் தனது கனவருடன் காரில் பயணம் செய்யும் போது இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு கார்களும் மிகவும் மோசமான முறையில் சேதமடைந்துள்ளன.