புதிய கடன் திட்டங்கள் அறிவிப்பு

1 loan
1 loan

இலங்கை மத்திய வங்கியின் மறுநிதியளிப்பு யோசனையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கடன் திட்டங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தொடர்பாடல் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

வங்கி கண்காணிப்பு திணைக்களம் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் திணைக்களத்தின் ஊடகவும் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் தேசிய நிதிச் சந்தைக்கு மேலதிகமாக 150 பில்லியன் ரூபாயை பணப்புழக்கத்திற்காக விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன் மத்திய வங்கியின் நியதி ஒதுக்க தேவைப்பாட்டு விகிதம் 200 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டு, 2 சதவீதமாக மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.