நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல்!

WHITE
WHITE

நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல் கலாசாரமும், அடக்குமுறை ஆட்சியும் உருவெடுத்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான தரிஷா பெஸ்டியனின் இல்லத்தில் நுழைந்து இரகசிய பொலிஸார் சோதனையிட்ட விடயத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.