மட்டக்குளி, தெமட்டகொடையில் ஒத்திகை தேர்தல்!

download 28
download 28

சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய மற்றுமொரு ஒத்திகை தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.

மட்டக்குளி மற்றும் தெமட்டகொடை பிரதேசங்களில் குறித்த ஒத்திகை தேர்தல் இடம்பெறவுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய பொதுத் தேர்தலை நடத்துவதில் எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வாக்காளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்படும்.

இதுவரையில் (15) மாவட்டங்களில் ஒத்திகை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.