அம்பாறை மாவட்டத்தில் ஜும்ஆ தொழுகை ஆரம்பம்!

dig 2
dig 2

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மிக நீண்ட நாட்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை(19) இம்மாவட்டத்தில் உள்ள மருதமுனை ,கல்முனை, நற்பிட்டிமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு ,சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று ,உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் சிறப்பாக சுகாதார நடைமுறையுடன் நடாத்தப்பட்டதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

dig 5

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குறித்த பள்ளிவாசல்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதியை சுகாதாரதுறையினர் பல நிபந்தனைகளுடன் கடந்த வாரம் வழங்கி இருந்தனர்.ஆனால் கூட்டு தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இருப்பினும் இந்த வாரம் கூட்டு தொழுகைகள் மற்றும் ஜும் ஆ தொழுகைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று இம்மாவட்டத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாக்களிலும் சுகாதாரத்துறையினர் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப சமூக இடைவெளி பேணப்பட்டு ஜும் ஆத்தொழுகைகள் நடாத்தப்பட்டன .

மேலும் குறித்த தொழுகைகள் யாவும் வழமை போன்று அல்லாமல் குத்பா பிரசங்கங்கள் தொழுகையுடன் அரை மணித்தியாலத்திற்குள் சுருக்கப்பட்டு தொழுகைகள் நடாத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது