யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் – த.சத்தியமூர்த்தி

625.500.560.350.160.300.053.800.900.160.90 8

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களுக்குஉள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதில் வீதி விபத்திற்கு உள்ளான நிலையில் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் 212 பேரும், ஏனைய விபத்தில் 118 பேரும், தீ விபத்தில் 7 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த 8 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதிவரையில் வீதி விபத்தில் 43 பேரும், ஏனைய விபத்தில் 68 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்
இவர்களில் வீதி விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.