ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தது!

unnamed 6 1
unnamed 6 1

நாட்டின் அரசியல் அமைப்பின் (19) வது திருத்தம் ஊடாக ஆணைக்குழுக்களை ஸ்த்தாபித்தமையினால் காவல் துறை ஆணைக்குழுவின் உதவியுடன் ஏப்ரல் (21) தாக்குதலுடன் தொடர்புடையோரை உடனடியாக கைது செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சிறிகொத்தவில் சட்டத்தரணிகளை இன்று சந்தித்து கலந்துரையாடிய போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளார வீழ்ச்சி காரணமாகவே ஜூலை மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை பாதிக்கப்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தலையீட்டால் காவற்துறை ஆணைக்குழுவினது சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மையுடன் செயற்பட்டமையினாலேயே ஏப்ரல் (21) பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.