நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் தொகையை அதிகரிக்க திட்டம்!

prasanna ranatunga travel voice 1
prasanna ranatunga travel voice 1

திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை (200)ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது என கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பான முன்மொழிவு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை நிகழ்வு மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக திருமண வைபவம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை (100)ஆக இதுவரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதாது என்று குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.