மத்திய வங்கியினரை எப்படி விமர்சிக்க முடியும் !

33
33

மத்திய வங்கியினரை எப்படி விமர்சிக்க முடியும்
என மங்கள கேள்வி கேட்டு மஹிந்தவுக்குக் கடிதம்

“மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை ஜனாதிபதிக்கு பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கபூர்வமான நுட்பம் கிடையாது என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டியுள்ளது.”

  • இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள் சமரவீர தற்போதைய நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சிக்கும், மத்திய வங்கிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அரசு ஆரம்பத்தில் இருந்து பொருளாதார ரீதியில் எடுத்த தீர்மானங்களே பொருளாதார வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கிளின் பொறுப்பு நிதி அமைச்சரின் கீழ் காணப்படுகின்றது. ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுநர்களைக் கடுமையாகத் திட்டித் தீர்த்த பின்னர் தாங்கள் எவ்வித மறுப்போ அல்லது நிதி அமைச்சர் என்ற ரீதியில் எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.

நியாயமான காரணிகளுக்கு நீங்கள் ஒருபோதும் குரல் கொடுக்க மாட்டீர்கள் என்ற காரணத்தால் இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன் எனவும் அதில் மங்கள மேலும் குறிப்பிட்டுள்ளார்.