பொதுத் தேர்தல் தொடர்பிலான தௌிவூட்டல் பத்திரங்கள்

gv printing 620x330 1

இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்களை தௌிவூட்டும் வகையில் வீடுகளுக்கு வழங்குவதற்கான பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 20 மாவட்டங்களுக்கான பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான பத்திரங்களை அச்சிடும் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இந்த பத்திரங்களை நாளை மறுதினத்திற்குள் (26) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாகவும் அரச அச்சகர் கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு 80 இலட்சம் பத்திரங்கள் அச்சிடப்படவுள்ளன.

இதேவேளை, 15 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் இன்று (25) ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் இதேவேளை, கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான அனைத்து வாக்காளர் அட்டைகளும் நாளை மறுதினத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி குறிப்பிட்டுள்ளார்.