நாவிதன்வெளி பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு

IMG 20200626 100143

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவில் உருவான “உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இன்று (26) வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

IMG 20200626 113020
IMG 20200626 111523 1

நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

IMG 20200626 111818

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  உதவி அரசாங்க அதிப்ர வீ. ஜெகதீஸன் ,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க,கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழினுட்ப உத்தியோகத்தர்கள் எம்.டி.எ றஹ்மான்,யு.எல்.எம் அபூபக்கர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , கிராம சேவையாளர்கள் பயனாளிகளும் கலந்துகொண்டனர்