பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

iWJFwKnNPaExFuDLG5WcFC

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது.

பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றம் குவைத் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனரென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

அதற்கமைய இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1661 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 365 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதோடு, 51 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.