முஸ்லிம் அமைப்பிடமிருந்து பணம் பெறவில்லை- மைத்திரி

103580776 srilanka maithiripalasirisena
103580776 srilanka maithiripalasirisena

முஸ்லிம் அமைப்பிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக முஸ்லிம் லீக் அமைப்பிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மைத்திரிபால சிறிசேன கடந்த ஆட்சி காலத்தில் பெற்றுள்ளார் என குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த விடயத்தில் எந்ததொரு உண்மையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மறுப்பு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மைத்திரி மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வருடம், உலக முஸ்லீம் லீக்கின் செயலாளர் நாயகம் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன்

இதன்போது குறித்த நிகழ்வில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி வழங்குவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முஸ்லீம் அமைப்பு முன்வந்துள்ளது என கூறப்பட்டது.

ஆனால் குறித்த நிதி எமக்கு கிடைக்கவில்லை. இதனை உலக முஸ்லீம் லீக் அமைப்பும் தெளிவுபடுத்தியுள்ளது.

அத்துடன் அந்த அமைப்பு, சில தகவல்களை கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதற்கு எந்ததொரு பதிலையும் வழங்கவில்லை.

இதனால் அந்த பணம் எமக்கு கிடைக்காமல் போனது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.