லீசிங்: முறைப்பாடுகள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

04401f20 306686 650x250 crop

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பில் 60 முறைப்பாடுகள்

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பில் 60 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அது குறித்து ஆராயும் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானவை தனிநபர் முறைப்பாடுகள் எனவும் குழு கூறியுள்ளது.

வட்டி தொடர்பிலான முறைகேடுகள், மீண்டும் கையகப்படுத்துதல், போன்ற சட்டவிரோதமாக லீசிங் மற்றும் நிதி நிறுவனங்கள் நடாத்திச் செல்லல் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மூவரடங்கிய குழுவினால் முறைகேடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இதன் அறிக்கையை நாளைய தினம் (01) மத்திய வங்கி ஆளுநரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பில் ஆராயும் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் குறித்து ஆராய்ந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஸ்மனால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.