கொரோனாவிற்கு பயன்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளில் சாதாரண சிகிச்சை…

anil jasinghe

கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வைத்தியசாலைகளில் எதிர்வரும் நாட்களில் சாதாரண சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 60 கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கிவைத்து, ஏனைய வார்ட்டுகள் சாதாரண சிகிச்சைகளுக்காக கையளிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இரண்டாவது கொரோனா அலை உருவாவதற்கான சாத்தியமுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ​ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.