தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

82ec6ca926200ca9f3e3586dc6b33869 XL
82ec6ca926200ca9f3e3586dc6b33869 XL

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (ஞாயிற்றுகிழமை) விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்படும் சகல இடங்களிலும் சுகாதார வலிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்கு ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக அவர்கள் மட்டும் ஜூலை மாதம் 13ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை தபால் மூல வாக்கை செலுத்த முடியும்.

சகல பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படையினர் , சிவில் பாதுகாப்பு திணைக்களம் , சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்களில் ஜூலை 16ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பி;ப 2.00 மணி வரையும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை தவிர ஏனைய அரச நிறுவன ஊழியர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்கை பதிவு செய்யலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் வாக்களிக்க முடியாமல் போன தபால் வாக்காளர்கள் ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை அந்தந்த அத்தாட்சிப்படுத்தல் அதிகாரி காரியாலயம் அமைந்துள்ள மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் வாக்களிக்க கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் ஜூலை 16ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரையும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட் 19 கட்டுப்பாட்டுக்காக விடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தனிநபர் இடைவெளியை பேணல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளல் ஆகியவற்றை பேண வேண்டும். புள்ளடியிடுவதற்கு நீலம் அல்லது கருப்பு மை கொண்ட பேனாவினை எடுத்து வருவது மிகச்சிறந்தததாக அமையுமென தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.