84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்

acf278ace47964dd364f4a014a014804 XL

புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களே,

சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் – தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்’

அவர் ஐயாயிரம் ரூபாய் தாள் காசுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.