சுமந்திரனுக்காக சசிகலாவுக்கு முட்டுக்கட்டைபோடும் சயந்தன்!

sayanthan sasikala
sayanthan sasikala

மிருசிவிலில் நடைபெற்ற கூட்டங்களில் சயந்தன், சசிகலா ரவிராஜின் ஆதரவு தென்மராட்சி பகுதியில் சுமந்திரனுக்கு மாத்திரமே எனும் தோரணையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இச்செயற்பாடு சசிகலா ரவிராஜை அசௌகரியத்திற்குள்ளாக்கியதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா ரவிராஜ் ஏற்கனவே தான் ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் சக வேட்பாளர்களுடன் அந்தந்த தொகுதிகளில் அவ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட விரும்புவதாகவும், தெரிவித்திருந்ததுடன் குறித்த வேட்பாளர்களின் ஆதரவையும் கோரியிருந்தார்.

ஆரம்பம் முதலே சசிகலா ரவிராஜின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த சயந்தன் சசிகலா ரவிராஜ் மற்றைய வேட்பாளர்களுடன் சுமூகமான உறவை பேணுவதை விரும்பவில்லை.

சசிகலா, சுமந்திரனின் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்பதையே சயந்தன் எதிர்பார்த்திருந்தார்.

ஆயினும் சகல வேட்பாளர்களுடனும் சேர்ந்து இயங்கும் சசிகலாவின் நிலைப்பாட்டினால் ஆத்திரமுற்ற சயந்தன் பிரச்சார கூட்டங்களில் சசிகலா ரவிராஜின் ஆதரவு தென்மராட்சி பகுதியில் சுமந்திரனுக்கு மாத்திரமே எனும் கருத்தை முன் வைத்து வருகின்றார்.

ஆயினும் சசிகலா ரவிராஜ், சக வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் தென்மராட்சி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கும் கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படும் போது அக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு மதிப்பளிப்பதே பண்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டங்களிலும் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், சயந்தனின் இப்படிப்பட்ட கருத்தின் பின், சசிகலா ரவிராஜ் தென்மராட்சி பகுதியில் சக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஒழுங்கமைத்த கூட்டங்களில் கலந்து கொண்டு சக வேட்பாளர்கள் யாவருடனும் சுமூகமான நட்பை பேணுவதை காணமுடிகின்றது.