இடர் வெல்வோம்’ பிரமாண்டமான தனி நடிப்பு போட்டி

Copy of Black History Month Flyer Made with PosterMyWall 2 1

இடர் வெல்வோம்’ பிரமாண்டமான தனி நடிப்பு போட்டி
SOLO Theatre Competition – 2020
——————————————————————
ஓராள் அரங்காற்றுகைத் திருவிழா – 2020 முன்னிட்டு செயல் திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற இரண்டாவது பிரமாண்டமான தனிநடிப்புப் போட்டி.

Copy of Black History Month Flyer Made with PosterMyWall 2

யாழ்ப்பாண மாநகர சபையும் செயல் திறன் அரங்க இயக்கமும் 2015 ஆண்டு இணைந்து நடத்திய தனிநடிப்புப் போட்டியின் தொடர்ச்சியாக இந்தாண்டு இரண்டாவது தனிநடிப்புப் போட்டியை செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்றது. இந்த தனிநடிப்புப் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த ஓராள் அரங்காற்றுகை நல்லூர் நாடகத் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆற்றுகை செய்யப்படும். தற்போதைய கொரோனா நோய் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு நிகழ்கலை ஆற்றுகையாகவும் (Onstage Performance) இயங்கலை ஆற்றுகையாகவும் (Online Peformance) நடைபெறவுள்ளது.

பிரதானகருப் பொருள் : ‘இடர் வெல்வோம்’

துணைக் கருப்பொருள் :

1. வீடும் வளவும்
2. ஊரும் உலாவும்;
3. வரவும் செலவும்
4. வாழ்வும் வளமும்
5. படிப்பும் பள்ளியும்;
6.சுற்றமும் சூழலும்
7. மருந்து மாத்திரை
8. பண்பாடும் பாரம்பரியமும்
9. சடங்கு சம்பிரதாயம்
10. நாடும் நடப்பும்
பிரதான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உபகருப்பொருள்களில் ஒரு கதையை சம்பவத்தை புனைவை தேர்ந்தெடுத்து அதனை இசை ஒலி காட்சி மற்றும் ஒளியுடன் நடித்துக் காட்டுதல் வேண்டும்.

உதாரணமாக தற்போதைய கொரோனா பேரிடர் உருக்கிய சூழல் அதனால் ஏற்பட்ட தாக்கம் அது எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது வெல்லப்பட்டது தொடர்பான பல சுவாரிசியமான சம்பவங்களும் கதைகளும் நம்மத்தியிலும் உலகெங்கும் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து தனிநடிப்பாக நிகழ்த்தலாம. கொரோனா பேரிடர் உதாரணத்துக்காகத் தரப்பட்டுள்ளது அதனைத்தான் கருப்பொருளாகக்கொள்ள வேண்டும் என்பதல்ல. போட்டியாளர் தாம் விரும்பிய இடரையும் அதனை வென்ற சூழலை கதைக்கருவாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
போட்டியில் பங்கு கொள்பவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
போட்டியில் ஆண் பெண் இருபாலாரும் பங்குபற்றலாம்.
போட்டியில்>
முதலாம் இடத்தைப் பெறுபவருக்கு ரூபா 25000.00
இரண்டாம் இடத்தினைப் பெறுபவருக்கு ரூபா 15000.00;
மூன்றாம் இடத்தினைப் பெறுபவருக்கு ரூபா 10000 பரிசுத் தொகையாக வழங்கப்படுவதோடு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும் சிறந்த பத்து தனிநடிப்பு ஆற்றுகைகளுக்கு தலா 1000 ரூபாவும் சான்றிதழும் வழங்கப்படவிருக்கின்றன.
ஆற்றுகை நேரம்: 5- 10 நிமிடங்கள் (கண்டிப்பாக ஐந்து நிமிடங்களுக்கு குறையாமலும் பத்து நிமிடங்களுக்கு மேற்படாமலும் இருந்தல் வேண்டும்.)

விண்ணப்ப முடிவு திகதி : 30.07.2020

போட்டியில் பங்கு கொள்பவர்கள் தமது ஆற்றுகையை சிமாட் கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து புலனம் வழியாக (Whatsup) 0094773112692 என்ற இலக்கத்தில் SOLO Theatre என்ற குழுவிற்கு அனுப்புதல் வேண்டும். வீடியோப் பதவில் சினிமாத்தனம் தவிர்க்கப்படுதல் வேண்டும். நிகழ்கலை ஆற்றுகையை ஒளிப்பதிவு செய்தால் போதுமானதாகும்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலை கருதி நாடுமுழுவதும் உலகெங்கும் இருக்கக்கூடியவர்களும் பங்கு கொள்ளும் வகையில் காட்சிப்பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் போட்டிக்காக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறந்த தனிநடிப்பு ஆற்றுகைகள் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் நல்லூர் நாடகத்திருவிழா -2020 நிகழ்கலை ஆற்றுகையாக(Onstage Performance) அல்லது இயங்கலை ஆற்றுகையாக (Online Performance) மேடையேற்றப்படும்.

போட்டிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தனிநடிப்பு தொடர்பான இயங்கலைப் பயிற்சிகள்(Online Training) வழிகாட்டல்கள் வழங்கப்படும். நிகழ்கலை ஆற்றுகைகளுக்கு ஒளி ஒலி அமைப்பு வசதிகளுடன் மேடையேற்றுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

போட்டியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் ஈ.படிவத்தை நிரப்பி jaffnatheatre@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். Google form படிவத்தின் வழியும் விண்ணப்பிக்கலாம்.
தனிநடிப்பு மற்றும் ஓராள் அரங்காற்றுகை தொடர்பாக இணையவழிப் பயிற்சிகள் யூலை மாதம் இறுதி வாரத்தில் இரண்டு நாட்கள் ஒருமணி நேரம் இயங்கலை மூலம் நடைபெறும். அதில் இணைந்து பயன்பெறலாம்.

———————————————————————————–
ஓராள் அரங்காற்றுகைப் போட்டி 2020
(செயல் திறன் அரங்க இயக்கம் நடத்தும் பிரமாணடமான ஓராள் அரங்காற்றுகைத் திருவிழா)
———————————————————————————–
1. முழுப் பெயர் :

2. முழுப்பெயர் (ஆஙகிலத்தில்):

3. பிறந்த திகதி/ வயது :

4. கல்வி கற்க்கும் பாடசாலை:

5. கல்விகற்கும் ஆண்டு:

6. ஆற்றுகையின் தலைப்பு:

7. வீயோப்பதிவு அனுப்பப்பட்ட திகதி:

8. தொடர்பு முகவரி :

9. தொடர்புக்காக கையடக்கத் தொலைபேசி இல :

10. ஆற்றுகையின் வீடியோ பதிவுகளை இணைய வழி வெளியிட சம்மதிக்கிறோம்:ஆம்/இல்லை

ஒப்பம் :

திகதி :