சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

DSC09970

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக ஏற்பட்ட முடக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன முற்றாக நீக்கப்பட்டதையடுத்து வர்த்தக நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

DSC09969

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் அளத்தல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 320 வர்த்தக நிலையங்கள் கடந்த ஒரு வாரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு 18 வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌசாத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் பணிப்புரையின் பேரில் வவுணதீவு காத்தான்குடி  கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி மண்முனை வடக்கு களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

DSC09965

நகைக்கடைகள் சில்லறை வர்த்தக நிலையங்கள் பேக்கரிகள் உட்பட பல இடங்களில் குறித்த திணைக்கள அதிகாரிகள் தேடுதல் நடத்தினர்.

இதன்போது நிறைகுறைந்த பாண்கள் விற்பனை செய்தமை முத்திரை பதிக்காத நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பாவித்து வியாபாரம் செய்தமை.

உட்பட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இவா்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.