உலர் உணவுப் பொதியினை வழங்கும் நடவடிக்கை!

IMG 0788 2 720x450 2
IMG 0788 2 720x450 2

நாட்டில் 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நிவாரணம் இதுவரை அரசாங்கம் பகலுணவு வழங்கிய பாடசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலங்களில் பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கமைவாகவே குறித்த உலர் உணவு பொதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த உலர் உணவுப்பொதிகள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.