13ஆவது திருத்தத்தை பாதுகாத்தே தீரவேண்டும்; சஜித்

1a016e85 e69e567f sajith 850x460 acf cropped

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் அதன் கீழுள்ள மாகாண சபை முறைமையையும் நாம் பாதுகாக்க வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

“அதனைப் பாதுகாப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நான் ஒரே கருத்தையே தெரிவிப்பேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கில் ஒரே விடயத்தையே தெரிவிப்பேன். நான் தெரிவிப்பதையே பின்பற்றுவேன்.

பொதுமக்கள் இலங்கைகையின் ஒற்றையாட்சி முறைமையையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையையும் பாதுகாக்க வேண்டும்.

இன்னொரு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாவதை எதிர்க்கும் தேசப்பற்றுள்ளவர்கள் என்ற ரீதியில் அதிகாரங்களை வழங்கும் மாகாண சபை முறைமையைப் பாதுகாக்க வேண்டும் எனக் கருதுகின்றோம்.

அரசின் செயற்றிறன் இன்மை காரணமாக மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்பிரல் மாதங்களுக்கான மின்கட்டணத்தைப் பெறப்போவதில்லை எனத்  தெரிவித்திருந்த அரசு தற்போது அந்தக் கட்டணங்களைச் செலுத்தாவிட்டால் மின்சாரத்தைத் துண்டித்துவிடுவதாக எச்சரித்துள்ளது” – என்றார்.