தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று மீட்பு

1594343679 arrest 2

கோக்கிலாய் கடற்கரையில் கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படை வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி, வன்னி முந்தலம களப்பு பகுதியில் மெற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக விறிக்கப்பட்ட 510 மீட்டர் நீளமுள்ள மீன்பிடி வலையொன்றை பறிமுதல் செய்தனர்.

அதன் படி, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கற்பிட்டி மீன்வள ஆய்வாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.