தமிழ் மக்களுக்கென்று ஒரு நிலையை நாட்டாவிட்டால் நாம் காணாமல் போய்விடுவோம்

sivakumar

இந்த பொது தேர்தல் தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும்  எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்கவில்லையெனின் தமிழ் மக்கள் இல்லாமல் போய்விடுவோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிகட்சியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சிவாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியிலுள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   கிழக்கு தமிழ் மக்கள் முக்கியமாகக யோசிக்க வேண்டிய விடயம் என்ன என்றால் இப்போழுது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இருந்த உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து போனவர்களின் அடிப்படையில் பார்த்தால் படிப்பறிவும் சரி பேசுகின்ற மொழியும் சரி நிறைய மாற்றம் கொண்டுவர வேண்டும்.

இதில் தமிழ் மக்கள் ஏராளமானோர் ஏமாற்றப்படுகிறார்கள். என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த அடிப்படையில் தான்  நான் முதன் முதலில்  தமிழ் கூட்டமைப்பில் வேட்பாளராக நிற்ககேட்டேன். ஆனால் அவர்கள் கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்கவில்லை. அதை பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. 
சிலர் சொல்கின்றனர் நல்ல வேளை உங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் கிடைக்கவில்லை கிடைத்திருந்தால் செல்லாத கடதாசியாய் போயிருப்பாய் என்று இது எனக்கு முக்கியமில்லை.

அதன் பின் கிழக்கு தமிழர் ஒன்றியத்திலிருந்து நல்ல படித்த தரமான பட்டதாரிகள் இருக்கவேணும் என்ற கோரிக்கையில் சிவனாதன்  சட்டத்தரணி வைத்தியர் அருளானந்தாம். என்னை அழைத்து என்னிடம் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.
இப்பொழுது எமது கிழக்கு மாகாணத்திலுள்ள நிலை மாற வேண்டுமென்றால் உங்களைப் போல நல்ல படித்த பட்டதாரிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கூட்டமைப்பில் கிடைக்கவில்லை என்று அரசியலில் இருந்து போக கூடாது என்றனர்.

எனக்கு அரசியல் வருவதற்கு சுத்தமாக விருப்பமில்லை. இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லுகின்றேன். நான் ஒரு அரசியல்வாதி இல்லை. நான் எல்லா மக்களையும் போல ஒரு சராசரி மனிதன். அரசியலுக்கு வருவது என் நோக்கம் கிடையாது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் நடக்கிற நிலையை பார்த்தால் நாம் எல்லா மக்களும் கண்ணை மூடிக் கொண்டு போனோம் என்றால் நாம் காணாமல் போய்விடுவோம் அது நிச்சயம். 

அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு செய்து கொடுப்பதற்கு வழிகாட்டுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று அந்த அடிப்படையில் தான் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் சேர்ந்து பாரம்பரியமான நமது உதயசூரியன் சின்னத்தில் சேர்ந்து வேட்பாளராக  நிற்கின்றேன்.

நல்ல படித்த தரமான  பல மொழியும் தெரிந்த வேட்பாளர்கள்  முக்கியமாக தமிழ் மக்கள் சிந்தித்து மிக முக்கியமாக வாக்கை சிதற விடாமல் சொந்தகாரர் சகோதரர்கள் பழகின கட்சி என்றெல்லாம் பார்க்காமல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் தமிழ் மக்களுக்கென்று ஒரு நிலையை நாட்டாவிட்டால் நாம் காணாமல் போய்விடுவோம். இந்த அடிப்படையில் தான் கிழக்கு தமிழர் ஒன்றியத்துடன் சேர்ந்து இந்த தேர்தலில் இறங்கியுள்ளேன். படிப்பறிவை பொறுத்தவரை மொழியை பொருத்தவரை ஆண்டவன் புண்ணியத்தால் எனக்கு எல்லாம் இருக்கிறது.

நான் 23 வருடங்களாக வெளியில் சென்று விட்டு இப்பொழுது நாடு திரும்பி வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அரசியலில் கால் வைத்துள்ளேன். இந்த நல்ல நோக்கத்தை மனதில்  அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் நன்றாக சிந்தித்து எனக்கு வாக்களிக்க வேண்டுமென்று நான் மக்களிடம் சொல்லவில்லை. யார் தரமானவர் என்று மக்கள் சிந்திக்க வேண்டும் அது மாத்திரமில்ல நமக்கு கிழக்கு மாகாணத்தில எமக்கென்று ஒரு தனி ஆட்சி நமது கையில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கிழக்கு மாகாணத்தை நமது கையில் கொண்டுவர முடியும். இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் நமது கைக்கு வேண்டுமென்றால் இந்த தேர்தலில் கண்டிப்பாக ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.