ரணிலும் துணைவியாரும் PCR பரிசோதனை

download 2 2
download 2 2

தான் மற்றும் மனைவி மைத்திரி விக்ரமசிங்க கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தான் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது வரையில் தனக்கும் மனைவிக்கும் கொரோனா தொற்றவில்லை. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை பிழை என்றால் இன்று எனக்கு கொரோனா தொற்றியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாங்கள் மேற்கொள்ளும் PCR பரிசோதனை அறிக்கைகளை பிழை என அரசாங்கம் நிராகரிப்பதாக, அந்த நடவடிக்கையில் இருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விலகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டும் வகையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் வெளியிடும் PCR பரிசோதனை அறிக்கைகளை அரசாங்கம் வேண்டுமென்றே மாற்றியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து அந்த பல்கலைக்கழகம் PCR பரிசோதனை நடவடிக்கைகளில் இருந்து விலகிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.