மேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது

Thiththikfkum isaffgi copy 1 620x330 2

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது மேலும் 388 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரக் காலப் பகுதியிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 148 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.