இராணுவத் தலையீடு அதிகரிக்கிறது! – விஜயகலா

vijayakala maheswaran.. 750x506 2
vijayakala maheswaran.. 750x506 2

அரச அதிகாரிகள் கூட அரசியல் வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இணுவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர்.

 மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவேலை திட்டங்கள் தேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளினால் திறப்பு விழா செய்யப்பட்டு திறக்கப்படுகின்றது

 இந்த விடயத்தை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்  அத்தோடு இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளைஞர் யுவதிகளிடம் அரச வேலைக்காக சுயவிபரகோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்

இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது ஜனாதிபதியின் பணிப்பிலா இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விவரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை இது நிறுத்தப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்மட்டுமே ஈடுபடுத்தப் பட்டார்கள் எனினும் தற்போதுமக்களின் அன்றாட செயற்பாடுகளில் இராணுவ தலையீடு தற்போது அதிகரித்து வருகின்றது இவை நிறுத்தப்பட வேண்டும்

அரச அதிகாரிகள் கூட அரசியல் வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள்

தற்போது மாவட்டஅபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களாக தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள் அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்  உறுப்பினர் தான் முன்னைய காலங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள் ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லை அந்த நிலைமை இந்த அரசாங்கத்தினால் மாற்றப்பட்டுள்ளது தகுதியற்றவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவே எதிர்வரும் காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்