வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற உரிய வழிமுறை – விமல் வீரவன்ச

625.500.560.350.160.300.053.800.900.160.90 10 1

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாற்று நடவடிக்கைகளை முன்வைக்கவில்லை. வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற அரசாங்கம் உரிய வழிமுறைகளை பொதுவாக ஏற்படுத்திக் கொடுக்கும் என கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள மர முந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 6 ஆயிரம் ஏக்கர் காணி நிலப்பரப்பில் 200 ஹெக்கர் நிலப்பரப்பு வடக்கு மாகாணத்தில் வாழும் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனை அபிவிருத்தி சபையும், மர முந்திரிகை கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் செயற்திட்டத்திற்கான இணக்கப்பாடு ஒப்பந்தம் அமைச்சர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது

வடக்கு மாகாண மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் காணப்படுகிறது. காணி இல்லாத பிரச்சினைகளின் காரணமாக பலர் நெருக்கடிநிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சரின் வழிக்காடலின் பெயரி வடக்கு மாகாணத்தில் வன்னி பிரதேசத்தில் மர முந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் மர முந்திரினை பயிர் செய்கையுட்ன். உபரி பயிர்ச்செய்கையினை 4 வருட காலததிற்கு முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியில் உள்ள முசலி பனை அபிவிருத்தி சபையின் விவசாய சங்கம், யாழ்ப்பாணத்தில் உள்ள வருணி விவசாய சங்கம் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்விரு சங்கத்தின் ஊடாகவும் விவசாயிகள் விண்ணப்பம் செய்ய முடியும். அத்துடன் விவசாய பயிர் செய்கைக்கு தேவையான கடனுதவியை வழங்க மக்கள் வங்கி, சமுர்த்தி வங்கி, மற்றும் இலங்கை வங்கி ஆகிய வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

தேசிய பாதுகாப்பிகை கருத்திற் கொண்டு வடக்கில் ஸ்தாபிக்கப்ட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு குறிப்பிடும் வடக்க மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதிப்பற்ற விதத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. வடக்கு மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் முழுமையாக முன்னெடுக்கும்.