பிணை முறி மோசடி குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள்

CID Investigation
CID Investigation

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜின மகேந்திரன் உட்பட 08 பேரிடம் பண மோசடி சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதன்படி, அந்த விசாரணைகளின் இறுதிகட்ட அறிக்கையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றின் தலைமை நீதவான் லங்கா ஜயரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேர்பெடுவல் டெராசீரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜன் அலோசியஸ் உட்பட 07 சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக மேன்முறையீற்று நீதிமனறம் அறிவித்துள்ளது.