பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை!

112573374 mahindathondaman 4 6
112573374 mahindathondaman 4 6

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு இன்று குறித்த இடத்தை பார்வையிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளையும் குறித்த குழு தற்போது ஆரம்பித்துள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் கடந்த 14 ஆம் திகதி தகர்க்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நிபுணர் குழுவொன்றினை பிரதமர் நியமித்தார்.

இதனை, கலாசார மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் கடந்த 14 ஆம் திகதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு இந்தக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.