தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வடமராட்சி மீனவர்கள்!

IMG 20200719 WA0002 696x522 1

கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட மீனவர்கள் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கும் என்று அறிவித்துள்ளனர்

வடமராட்சி கடற்தொழில் சமாசத்துக்கு உள்பட்ட மீனவர்கள் எவரும் கடற்தொழிலுக்கு செல்லமாட்டார்கள்

வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடலட்டை தொழில் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவற்றைத் தடுக்க கோரி கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாமையைக் கண்டித்தும் வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட்ட மீனவர்கள் இந்த தொழில் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு வடமாகாண கடற்தொழிலாளர்கள் அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்று வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.