கொரோனா தொடர்பில் சுகாதார கள உத்தியோகத்தர்களின் முக்கிய தீர்மானம்

halth
halth

கொரோனா வைரஸ் பரவல் நாட்டிற்குள் அதிகரித்து வரும் தீர்மானம்மிக்க தருணத்தில், பொது சுகாதார பரிசோதகர்கள் கடமைகளில் இருந்து விலகிக்கொண்டமையானது கண்டிக்கத்தக்க விடயமென பொது சுகாதார கள உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடமைகளில் இருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் விலகிக்கொண்டு இன்றுடன் ஐந்தாவது நாளாகும் அதேவேளை நேற்று தொடக்கம் அவர்கள் அனைத்து வகையான தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர். எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தங்களால் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியுமென பொது சுகாதார கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.