தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடல்!

4e8b8

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ இடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய மண் சரிவு காரணமாக இப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (20) காலை முதல் நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.