அனுமதி பெறப்படவில்லை ; செனரத் திசாநாயக்க

81141e91 8f03 4e9f 83ca f061975b7d83
81141e91 8f03 4e9f 83ca f061975b7d83

குருணாகல் நகரிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் சேதமாக்கப்படுதவற்கு முன்னர்,பொறுப்பான திணைக்களத்திடமோ அல்லது வேறு பொறுப்பான பிரிவினரிடமோ அனுமதி பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டிடம்,  உணவக விடுதி என முன்னாள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவல, 2019 ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக குருநாகல் நகர முதல்வர் குஷார சங்ஜீவ நேற்றைய தினம்( திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை மறுதினம் சமர்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.