குளவிக்கொட்டிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க விசேட அங்கி

Upconty tea

பெருந்தோட்ட பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குளவி கொட்டுக்கு இலக்காகாமல் பாதுகாக்கும் வகையில் புதியதொரு அங்கியை வழங்க நுவரெலியா மாவட்ட அரச உத்தியோகஸ்தர் சங்கத்தால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

என மாவட்டச் செயலாளர் ரோகன புஸ்பகுமார அவரது காரியாலயத்தில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட அரச ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர் கிங்சிலி கோமஸ் என்பவரால் விசேட அங்கிகள் பெண்கள், ஆண்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது, எனவும் இந்த அங்கிகளைத் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள் ஆண்களுக்கு வழங்கினால் அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காக மாட்டார்கள் எனவும், கடந்த காலங்களில் தேயிலை செடியிலும், கற்குகையிலும், மரங்களிலும் கலைந்து செல்லும் குளவி கொட்டுக்குப் பலர் இலக்காகி உள்ளதாகவும், இதன்படி இந்த வருடம் இதன் காரணமாக 4 பேர் உயிர் இழந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடிக்கடி பெருந்தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வருவதால் ஒரு சில தோட்ட முகாமைத்துவம் குளவி கூடுகளை அகற்ற பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குளவிகளை அகற்றுவதில் சிரமம் ஏற்படுவதாலும் அவைகள் இறப்பதாலும் எதிர்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் நுவரெலியா மாவட்ட அரச ஊழியர் சங்கம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட உடையை அணிந்து பணிபுரிந்தவர்கள் கடந்த ஒரு மாத காலமாகக் குளவி கொட்டுக்கு இலக்காகவில்லை.

இவ்வாறான விசேட உடை பெருந்தோட்டத்தில் பணிபுரிவோருக்குக் குளவி கொட்டுக்கு இலக்காகாமல் இருக்கவே விசேட அங்கி தயாரித்து உள்ளதாக அரச ஊழியர் சங்க உறுப்பினர் கிங்சிலி கோமஸ் தெரிவித்தார்.