கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட 150 பேர்

image b07785f5ae
image b07785f5ae

கம்பஹாவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஆசிரியருடன் தொடர்புகளைப் பேணிய 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்த ஊழியருடன் பயணித்த வாகனச் சாரதியிடமிருந்து குறித்த ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பொது சுகாதாரப் பொறுப்பதிகாரி சுபாஷ் சுபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனாத் தொற்றிற்கு உள்ளான குறித்த ஆசிரியருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கம்பாஹாவில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரியும் குறித்த ஆசிரியர் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியருடன் தொடர்பு கொண்டவர்கள், அவரது பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அவரது கல்வி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் அவரது இல்லத்திற்குச் சென்றவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.