ரிஷாட் பதியுதீனுக்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

download 5 1 1
download 5 1 1

கடந்த வருட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சி.ஐ.டி.யின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீனை ஜூலை 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பாதியுதீனை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.